வீடு / சமையல் குறிப்பு / Channa masal

Photo of Channa masal by neela karthik at BetterButter
0
3
5(1)
0

Channa masal

Jan-02-2018
neela karthik
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • ఉత్తర భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్
  • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை கொண்டைகடலை 1 கப்
  2. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 2
  4. பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை தலா 2
  5. பச்சை மிளகாய் 2
  6. சென்னா மசால் தூள் 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. கரம்மசால் தூள் 1/2 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  11. எண்ணெய் தாளிக்க
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தக்காளியை விழுதாக அரைத்து வைக்கவும்
  3. கொண்டை கடலையுடன் பிரியாணி இலை பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து குக்கரில் 5 முதல் 7 விசில் விட்டு வேக வைக்கவும்
  4. பின் சிறிது கொண்டைகடலையை எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் இல்லாமல் வதக்கவும்
  7. பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  8. 5 நிமிடம் வதக்கி கரம் மசால் தூள் தவிர மற்ற மசால் தூள்களை சேர்த்து வதக்கி விடவும்
  9. பின் அரைத்த, வேக வைத்த கொண்டைகடலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  10. அதனுடன் கரம் மசால் தூள் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-02-2018
Pushpa Taroor   Jan-02-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்