Photo of Kaalan Kurikiyathu by Vins Raj at BetterButter
230
3
0.0(2)
0

Kaalan Kurikiyathu

Jan-02-2018
Vins Raj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Kaalan Kurikiyathu செய்முறை பற்றி

இது ஒரு கேரளா உணவு வகையாகும். என் தோழி மூலமாக இந்த வித்தியாசமான குழம்பை கற்றுக்கொண்டேன். மோர் கொண்டு தயார் செய்யும் ஒரு கட்டியான குழம்பு வகை. மோரை சுண்டவிடுவதால் இது குறிக்கியது என்பதாகும். மிக குறைவான பொருட்கள் கொண்டு , மிகவும் சுலபமான அதே சமயம் வித்தியாசமான குழம்பு, செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 லிட்டர் மோர்
  2. 1 தே.க. மிளகாய் தூள்
  3. 1 1/2 தே.க. மிளகு தூள்
  4. 1/2 தே.க. வெந்தயப்பொடி
  5. 1/2 தே.க. சீரக பொடி
  6. 1/2 தே.க. மஞ்சள் தூள்
  7. 1 தே.க. தேங்காய் எண்ணெய்
  8. 1 தே.க. கடுகு
  9. 1 தே.க. வெள்ளை உளுந்து
  10. 2 முழு காய்ந்த மிளகாய் வற்றல்
  11. 1 கொத்து கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. மோரை கடைந்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், மிளகு தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடையில் எண்ணையை சூடாக்கி அதில் கடுகு போட்டு அது பொறிக்க ஆரம்பித்தவுடன், வெள்ளை உளுந்து சேர்த்து பிறகு கறிவேப்பிலையும் மற்றும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு தாளிக்கவும்.
  3. இதில் கலந்து வைத்துள்ள மோரை சேர்த்து தேவைக்கேற்ப உப்பை சேர்த்து மிதமான தீயில் மோர் கலவையை கட்டியான பதத்துக்கு சுண்ட விடவும்.
  4. இவ்வளவு மோர் அளவுக்கு இந்த பதம் வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகும்.
  5. வேண்டிய பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Mar-19-2018
Subhashni Venkatesh   Mar-19-2018

nice

Pushpa Taroor
Jan-02-2018
Pushpa Taroor   Jan-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்