வீடு / சமையல் குறிப்பு / புளியிட்ட அரைகீரை

Photo of Puliitta araikeerai by Krishnasamy Vidya Valli at BetterButter
599
2
0.0(0)
0

புளியிட்ட அரைகீரை

Jan-02-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புளியிட்ட அரைகீரை செய்முறை பற்றி

அரைகீரையை வெறும் மசித்து வைக்காமல் இந்த புளியிட்ட கீரை செய்தால் குழம்பு போல் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது கெட்டியாக செய்து தயிர் சாதத்திற்கு கூட தொட்டுக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைகீரை - 1 கப் பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. புளி - ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  5. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. சாம்பார்பொடி-1/2தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  9. காரப்பொடி - 1 சிட்டிகை
  10. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  11. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  13. மிளகாய் வத்தல் - 1
  14. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  15. வெந்தயம் - 1 / 4 தேக்கரண்டி
  16. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  17. பெருங்காயம் - 2 சிட்டிகை
  18. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கீரையை நன்றாக அலம்பி பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. நன்றாக வெந்ததும் புளியை கரைத்து சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  3. சாம்பார் பொடி தனியா பொடி காரப்பொடி சேர்த்து சுருள கிளறி தனியாக எடுத்துவைக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  5. வெங்காயம் போட்டு வதக்கவும்.
  6. பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. தனியா செய்து வைத்த கீரையை சேர்க்கவும்
  8. செமி சாலிட் பதம் வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  9. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான புளியிட்ட கீரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்