வீடு / சமையல் குறிப்பு / பெங்காலி முட்டை கத்திரிக்காய மலாய் கிரேவி

Photo of Bengali brinjal malai gravy by Jayanthy Asokan at BetterButter
84
2
0.0(0)
0

பெங்காலி முட்டை கத்திரிக்காய மலாய் கிரேவி

Jan-02-2018
Jayanthy Asokan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெங்காலி முட்டை கத்திரிக்காய மலாய் கிரேவி செய்முறை பற்றி

முட்டையை வேக வைத்து எண்ணையில் வறுத்து மசாலா பொடியுடன் கத்திரிக்காய் சேர்த்து மலாய் கிரீம் சேர்த்து செய்வது இக் கிரவி யாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மேற்கு வங்காளம்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 4
  2. பெங்களூரு கத்திரிக்காய் 1
  3. இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 3
  6. சோம்பு 1டீஸ்பூன்
  7. பட்டை 1
  8. லவங்கம் 2
  9. சாம்பார் பொடி 2டீஸ்பூன்
  10. மஞ்சள் பொடி 1/2டீஸ்பூன்
  11. பிரெஷ் கிரீம் 2மேஜைக்கரண்டி
  12. உப்பு தேவைக்கு ஏற்ப
  13. கொத்தமல்லி சிறிததவுலு
  14. சீரகம் 1டீஸ்பூன்
  15. எண்ணெய் 2மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து கொள்ள வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டையை மஞ்சள் தூளுடன் வறுக்க வேண்டும். வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
  3. இன்னும் ஒரு வானலியில் எண்ணெய் விட்டு 3/4 வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் வெட்டி வைத்த கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
  4. 1/4 வெங்காயம், சீரகம் மற்றும், சோம்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
  5. அரைத்த விழுதை கடாயில் சேர்த்து வதக்கி எல்லா பொடிகளையம் சேர்த்து வதக்க வேண்டும்.
  6. தண்ணீர் விட்டு கொதிக்கும் போது முட்டை சேர்க்க வேண்டும். உப்பும் சேர்க்கவேண்டும்.
  7. பின் பிரெஷ் கிரீம் சேர்த்து மல்லி தூவி பரிமாறவேண்டும்.
  8. முட்டை கத்திரிக்காய் மலாய் கிரேவி தாயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்