வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு சாம்பார்

Photo of Moong dal sambar by Asiya Omar at BetterButter
365
8
0.0(0)
0

பாசிப்பருப்பு சாம்பார்

Jan-04-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

இந்த சாம்பார் பொங்கல்,மற்றும் டிபன் வகைகளுக்கு பொருத்தம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசிப்பருப்பு - 100 கிராம்
  2. பிஞ்சு கத்திரிக்காய் -100 கிராம்
  3. கீறிய பச்சை மிளகாய் -5
  4. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  5. சாம்பார் பொடி -1 தேக்கரண்டி
  6. சின்ன வெங்காயம் -100 கிராம்
  7. தக்காளி - 2 பெரியது
  8. தாளிக்க:-
  9. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  10. கடுகு -1 தேக்கரண்டி
  11. பெருங்காய்த்தூள் -2 பின்ச்
  12. மிளகாய் வற்றல் -2
  13. கருவேப்பிலை -2 இணுக்கு
  14. அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை.
  15. மேலே போட ஒரு தேக்கரண்டி நெய்.

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பருப்பை லேசாக மணம் வரும் படி வறுத்தெடுக்கவும்.நிறம் மாறக்கூடாது.அடுத்து ஊற வைக்கவும்.
  2. குக்கரில் ஊறிய பருப்புடன்,பொடியாக நறுக்கிய கத்திரிக்காய்,கீறிய பச்சை மிளகாய்,நறுக்கிய தக்காளி,மஞ்சள் தூள்,சாம்பார் பொடி சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வேக வைக்கவும்.
  3. ஆவியடங்கியவுடன் திறந்து அகப்பை அல்லது மத்தால் லேசாக மசிக்கவும்.உப்பு தேவைக்கு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் கொதி நீர் சேர்க்கவும்.
  4. கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு,கிள்ளிய வற்றல்,கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.பாதிப் பாதியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. தயார் ஆன சாம்பாரில் கொட்டவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.மணமாக இருக்கும்.
  6. பாசிப்பருப்பு சாம்பார் தயார்.பொங்கல் ,இட்லி,தோசைக்கு சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்