வீடு / சமையல் குறிப்பு / பான்சி ரவை - கிஸ்மிஸ் பொங்கல்

Photo of Bansi Rawa - Raisin pongal by Priya Satheesh at BetterButter
682
5
0.0(0)
0

பான்சி ரவை - கிஸ்மிஸ் பொங்கல்

Jan-12-2018
Priya Satheesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பான்சி ரவை - கிஸ்மிஸ் பொங்கல் செய்முறை பற்றி

உலர்ந்த திராட்சையை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பொங்கல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பான்சி ரவை 1/2 கப்
  2. பாசிப்பருப்பு 1/4 கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. கிஸ்மிஸ்/ உலர்ந்த திராட்சை 1/2 கப்
  5. சர்க்கரை 1/2 கப்
  6. ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
  7. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  8. முந்திரி 5
  9. பாதாம் 5

வழிமுறைகள்

  1. பொங்கல் செய்வதற்கு முன்பு உலர்ந்த திராட்சையை ஊற வைக்கவும்.
  2. வாணலியில் ரவையை நெய் விட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
  3. பானையில் பாசிப்பருப்பு மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  4. இத்துடன் வறுத்த ரவை மற்றும் மீதமிருக்கும் தண்ணீரை சேர்த்து வேகவிடவும்.
  5. ஊற வைத்த உலர்ந்த திராட்சையை மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் மையாக அரைக்கவும்.
  6. ஒரு வாணலியில் அரைத்த உலர்ந்த திராட்சை/ கிஸ்மிஸ் கலவையை சேர்க்கவும்.
  7. இத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
  8. சர்க்கரை நன்கு கரைந்ததும், இந்த கலவையை பொங்கலில் சேர்த்து வேகவிடவும்.
  9. வாணலியில் நெய் விட்டு பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து பொரித்து பொங்கலில் சேர்த்து சூடாக பிரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்