வீடு / சமையல் குறிப்பு / சீனி கிழங்கு ரோஸ்ட்

Photo of Seenikizhangu Roast by Krishnasamy Vidya Valli at BetterButter
339
6
0.0(0)
0

சீனி கிழங்கு ரோஸ்ட்

Jan-14-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீனி கிழங்கு ரோஸ்ட் செய்முறை பற்றி

பொங்கல் பண்டிகை காலத்தில் அதிகமாக கிடைக்கும் கிழங்கு வகை இது . இதை இட்லி தட்டில் வேகவைத்து அப்படியே சாப்பிடுவார்கள். சிறிது வித்தியாசமாக உருளைக்கிழங்கு காரக்கறி போல் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் உருளைகிழங்கு ரோஸ்ட் செய்வதற்கு பதிலாக இதை செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீனி கிழங்கு - நறுக்கியது - 2 கப்
  2. மஞ்சள் பொடி - 1 /2தேக்கரண்டி
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 4 சிட்டிகை
  6. தாளிக்ககடுகு-1தேக்கரண்டி
  7. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. எண்ணெய் - 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சீனி கிழங்கை நன்றாக அலம்பி தோல்சீவி சதுரமாக நறுக்கி வைக்கவும்
  2. மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்
  3. வேகவைத்த சீனி கிழங்கை வடிகட்டிக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வடிகட்டிய கிழங்கை சேர்க்கவும்
  5. அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்
  6. பாதி வதங்கியதும் உப்பு காரப்பொடி பெருங்காயம் சேர்க்கவும்
  7. நல்ல ரோஸ்ட் அனவுடன் அடுப்பை அணைத்து விடவும். அதிகமாக எண்ணெய் தேவைப்படாது. இரும்பு கடாயில் செய்தால் குறைந்த நேரத்தில் கூடுதல் முறுமுறுப்பு கிடைக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்