வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை சாதம்

Photo of Curry Leaves Rice by Krishnasamy Vidya Valli at BetterButter
622
2
0.0(0)
0

கருவேப்பிலை சாதம்

Jan-15-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை சாதம் செய்முறை பற்றி

கனுபொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது மரபு . அதற்கு இந்த கருவேப்பிலை சாதம் செய்யலாம். தேவையான பொடியை முந்தைய நாள் கூட செய்து வைக்கலாம். மொத்தமாக திரித்து விட்டு தேவைப்படும்போது சாதம் சேர்த்து கலந்து கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சரிசி - 1 / 2 கப்
  2. உப்பு-1/4தேக்கரண்டி
  3. நெய் - 1 / 2 தேக்கரண்டி
  4. வறுத்து திரிக்க
  5. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை - 1 மேஜைகரண்டி ( இலையாக)
  7. கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  8. மிளகாய் வத்தல் - 2
  9. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் -2டிராப்ஸ்
  11. தாளிக்க
  12. கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  14. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை - 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து குக்கரில் ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து உதிர்உதிராக வேக வைக்கவும் வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்
  2. கடாயில் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  3. மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து திரித்ததை சேர்த்து நன்றாக கிளறவும்
  5. உப்பு மற்றும் சாதம் சேர்த்து கிளறவும்
  6. அடுப்பை அணைத்து அரைதேக்கரண்டி நெய் விட்டு கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்