வீடு / சமையல் குறிப்பு / பேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட்

Photo of No Bake Chocolate Strawberry Tart by Deepali Jain at BetterButter
520
273
4.7(0)
0

பேக் இல்லை சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி டார்ட்

Feb-11-2016
Deepali Jain
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • டின்னெர் பார்ட்டி
 • ஃபிரெஞ்ச்
 • சில்லிங்
 • டெஸர்ட்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. 300 கிராம் ஓரியோ பிஸ்கட்டுகள் நீங்கள் விரும்பும் சுவையில்.
 2. 1/2 கப் உருக்கிய உப்பிடப்படாத வெண்ணெய்
 3. 200 மிலி கனமான கிரீம்
 4. 300 கிராம் அடர் சாக்லேட்
 5. புதிய ஸ்ட்ராபெர்ரிக்கள்

வழிமுறைகள்

 1. உங்கள் விருப்பத்திற்கேற்ப வட்டமான டார்ட் பாத்திரத்தைத் தயார் செய்துகொள்க. ஓரியோ பிஸ்கெட்டை உங்கள் மிக்சர் ஜாரில் அல்லது புராசசரில் வைக்கவும். இப்போது உருக்கிய வெண்ணெயைச் சேர்த்து அடர்த்தியான ஒட்டும் தன்மையிலான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் பிஸ்கெட் கலவையை எடுத்துவைக்கவும். கரண்டியின் பின் பக்கத்தைப் பயன்படுத்தி சமச்சீரான அடிப்பக்கத்தை செய்வதற்கு அவற்றின் மீது அழுத்தவும். பூரணத்தைத் தயார் செய்யும்வரை பிரிஜ்ஜில் வைக்கவும்.
 3. சாக்லேட்டை சீரற்று நறுக்கி வெப்பம் கடத்தா பாத்திரத்தில் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மொத்தமான கடாயில் சிறு தீயில் கிரீமை சூடுபடுத்திக்கொள்க. கொதிக்க விடவேண்டாம். சூடானக் கிரீமை நறுக்கிய சாக்லேட் மீது ஊற்றவும்.
 4. சில நிமிடங்கள் விட்டுவைக்கவும். ஒரு கரண்டியை அல்லது மத்தைப் பயன்படுத்தி, சாக்லேட் உருகும் வரை மெதுவாக கடையவும். கிரீமின் வெப்பம் சாக்லேட்டை உருக்கும்.
 5. கனாசியை தயாரித்து வைத்துள்ள டார்ட் அடித்தளத்தில் ஊற்றவும். புதிய ஸ்ட்ராபெர்ரியைக் கழுவி சுத்தப்படுத்தவும். கானேசியில் அவற்றை அழுத்தவும். டார்ட்டை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.
 6. பரிமாறுவதற்குத் தயாராக இருக்கும்போது, பிரிஜ்ஜில் இருந்து எடுத்து துண்டுபோடவும். உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்