வீடு / சமையல் குறிப்பு / Potato roast ( Pallipalayam style)

Photo of Potato roast ( Pallipalayam style) by Asiya Omar at BetterButter
477
6
0.0(1)
0

Potato roast ( Pallipalayam style)

Jan-18-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
  2. நல்ல எண்ணெய் -2 -3 மேஜைக்கரண்டி
  3. கடுகு -1 தேக்கரண்டி
  4. கிள்ளிய மிளகாய்வற்றல் -8
  5. கருவேப்பிலை -3 இணுக்கு
  6. சின்ன வெங்காயம் -100கிராம்
  7. இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது -தலா 1 மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா 1/2 தேக்கரண்டி
  9. உப்பு சுவைக்கு.
  10. தேங்காய்த்துருவல் - 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி வைக்கவும்.சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டும் சிறியதாக நறுக்கி தயாராய் இருக்கட்டும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,கடுகு வெடிக்கவும்,கருவேப்பிலை கிள்ளிய வற்றல் சேர்க்கவும்.
  3. பொடியாக நறுக்கிய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. சின்ன வெங்காயம் சேர்த்து ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  5. உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும்.
  6. திறந்து உருளை வெந்ததும் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்
  7. தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  8. சூடாகப் பரிமாறவும்.சாதத்துடன் சாப்பிட செமை.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-18-2018
Pushpa Taroor   Jan-18-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்