வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சப்பாத்தி

Photo of Radish Sappathi by Geetha C at BetterButter
718
3
0.0(0)
0

முள்ளங்கி சப்பாத்தி

Jan-27-2018
Geetha C
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சப்பாத்தி செய்முறை பற்றி

முள்ளங்கி உடம்புக்கு மிகவும் நல்லது. அதனையே சப்பாத்தியாக செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு - 4 கப்
  2. உப்பு - தேவைக்கு ஏற்ப
  3. எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
  4. தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
  5. துருவிய முள்ளங்கி - 2 கப்
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
  10. சீரகம் - 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தண்ணீர், எண்ணெய் விட்டு பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும்.
  3. நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. துருவிய முள்ளங்கி போட்டு வதக்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு வதக்கவும். நன்றாக வெந்து இருக்கனும்.
  6. முள்ளங்கி மசாலா ரெடி.
  7. சப்பாத்தி மாவை பிசைந்து சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்திக் கட்டையில் வைத்து குழவியால் பூரி அளவிற்கு தேய்க்கவும்.
  8. நடுவில் முள்ளங்கி மசாலா வைத்து நான்கு பக்கமும் மூடி குழவியால் சப்பாத்தி போல தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சப்பாத்தியை சுடவும்.
  9. முள்ளங்கி சப்பாத்தி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்