Photo of Ras malai by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
398
6
0.0(1)
0

Ras malai

Feb-14-2018
Wajithajasmine Raja mohamed sait
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தினமும்
  • இந்திய
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால்-2 லிட்டர்
  2. சீனி -200 கிராம்
  3. ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
  4. பாதாம் ,பிஸ்தா ,முந்திரி பருப்புகள் -சிறிதளவு
  5. எலுமிச்சை சாறு (அ) வினிகர் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பன்னீர் செய்ய ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும் .அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது வினிகர் ஊற்றி பாலை திரிய வைக்க வேண்டும் .
  2. பால் முழுவதுமாக திரிந்தவுடன் ஒரு துணியில் ஊற்றி பந்து போல கட்டி நீரை நன்கு பிழிந்து எடுக்க வேண்டும் .30-45 நிமிடம் நீர் நன்கு வடியும் படி வைக்க வேண்டும் .
  3. 45 நிமிடம் கழித்து பன்னீரை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகவோ அல்லது தட்டையாகவோ விரும்பிய வடிவமாக செய்துகொள்ளவும் .
  4. இப்பொழுது மீதமுள்ள 1 லிட்டர் பாலை அடிக்கனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும் .பால் 1 லிட்டரிலிருந்து 1/2 லிட்டராக வரும் வரை காய்ச்சல் வேண்டும் .
  5. இதனுடன் சீனி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளற வேண்டும் .
  6. இப்பொழுது தட்டி வைத்துள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு வேக விடவும் .
  7. நன்கு பன்னீர் உருண்டைகள் வெந்தவுடன் பாதாம் ,முந்திரி ,பிஸ்தா பருப்புகளை பொடி செய்து போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  8. சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும் .சுவையான ரசமலாய் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Delicious

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்