வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Broad Beans Poriyal by Paramasivam Sumathi at BetterButter
442
7
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Feb-14-2018
Paramasivam Sumathi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - பெரியது 1
  3. பச்சைமிளகாய் - 2
  4. கடலை பருப்பு - 3 தே. க
  5. கடுகு - தாளிக்க
  6. சீரகம் - 1/2 தே. க
  7. கறிவேப்பிலை
  8. எண்ணெய் -1 தே .க
  9. தேங்காய் - துருவல் 2 தே . க
  10. பெருங்காயம் - சிட்டிகை
  11. மஞ்சள்தூள்

வழிமுறைகள்

  1. முதலில் அவரைக்காய் நன்றாக கழுவிட்டு, சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
  2. வெங்காயத்தையும், பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்கவும்
  4. பிறகு அவரைக்காய் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு கலந்து விடவும்.
  5. மூடி வைக்க வேண்டாம். நிறம் மாறிவிடும்.
  6. காய் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் அவரைக்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்