வீடு / சமையல் குறிப்பு / அடைத்த கத்திரிக்காய் பொரியல்

Photo of Stuffed Brinjal Poriyal by Priya Tharshini at BetterButter
1443
9
0.0(0)
0

அடைத்த கத்திரிக்காய் பொரியல்

Feb-15-2018
Priya Tharshini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அடைத்த கத்திரிக்காய் பொரியல் செய்முறை பற்றி

கத்திரிக்காய் மசாலா அடைத்த பொரியல் வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் - 12 ( சிறிய அளவு )
  2. க.பருப்பு - 1 மேசைக்கரண்டி
  3. தனியா - 2 மேசைக்கரண்டி
  4. வி.மிளகா - 2
  5. உப்பு - தேவைக்கு
  6. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - சிறிதளவு
  8. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  9. புளி கரைசல் - 4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் க.பருப்பு , தனியா மற்றும் வி.மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வருக்கவும்.
  2. அதை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  3. கத்திரிக்காய் படத்தில் உள்ளவாறு நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  4. அரைத்த பொடி உடன் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  5. மசாலா பொடியை கத்திரிக்காய்க்குள் அடைக்கவும்.
  6. அனைத்து கத்திரிக்காய் உள்ளும் இதை செய்யவும்.
  7. கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் கத்தரிக்காய் சேர்க்கவும்.
  8. 3 நிமிடம் வதங்கியதும் புளி கரைச்சல் சேர்க்கவும்.
  9. மூடி போட்டு கத்திரிக்காய் வேகும் வரை வதக்கவும். பொரியல் தயார் ஆனதும் அடுப்பை அனைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்