வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொடி கறி

Photo of Vendakkai Podi Kari by Divya  at BetterButter
561
4
0.0(0)
0

வெண்டைக்காய் பொடி கறி

Feb-15-2018
Divya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொடி கறி செய்முறை பற்றி

தஞ்சாவூரின் பாரம்பரியமான சுவையான வெண்டைக்காய் மற்றும் மசாலா பொடி சேர்த்து செய்யப்படும் கறி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 1/2 கலோ
  2. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  3. கடுகு 1/2 தேக்கரண்டி
  4. காய்ந்த மிளகாய் 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. புளி கரைசல் 1 மேசைக்கரண்டி
  7. வெல்லம் 1 தேக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய் 2 தேக்கரண்டி
  10. வறுத்து பொடிக்கவும்-
  11. உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
  12. கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
  13. தனியா 1 மேசைகரண்டி
  14. சீரகம் 1 தேக்கரண்டி
  15. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  16. காய்ந்த மிளகாய் 6
  17. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
  2. வெண்டைக்காயை நங்கு கழுவி ஈரத்தை தொடைத்து 1 அங்குள துண்டுகளாக நறுக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு வெண்டைக்காயை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
  5. இதனுடன் மஞ்சள்தூள், புளி கரைசல், வெல்லம் ,சிறிது தண்ணீர் தெளித்து கடாயை மூடி வெண்டைக்காயை வேக விடவும்.
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. கடைசியில் பொடித்த மசாலாவை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வறுக்கவும்.பிறகு சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்