வீடு / சமையல் குறிப்பு / ஹோட்டல் ஸ்டைல் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்

Photo of Hotel style mixed vegetable poriyal by Krishnasamy Vidya Valli at BetterButter
654
4
0.0(0)
0

ஹோட்டல் ஸ்டைல் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்

Feb-16-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹோட்டல் ஸ்டைல் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல் செய்முறை பற்றி

எந்த ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டாலும் கண்டிப்பாக இந்த பொரியல் இருக்கும். எந்த காய்கறி விலை குறைவோ அதில் மூன்று அல்லது நான்கு எடுத்து இந்த பொரியல் செய்வார்கள்.எண்ணெய் அதிகமில்லா ஆரோக்கியமான பொரியல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் முட்டைகோஸ் பச்ச பட்டாணி பீன்ஸ் -ஏதாவது இரண்டு மூன்று காய் சேர்த்து நறுக்கிக்கொள்ளவும் -2 கப்
  2. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
  5. தாளிக்க
  6. எண்ணெய் - 1தேக்கரண்டி
  7. கடுகு -3/4 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -3/4 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -2
  10. பெருங்காயம் -4 சிட்டிகை
  11. கருவேப்பிலை -2 ஆர்க்கு (விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. நறுக்கிய காய்களை மஞ்சள் பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும். மைக்ரோ வேவ் அவனில் கூட வேக வைத்து எடுக்கலாம்
  2. அளவாக தண்ணீர் வைக்கவும். கூடுதலாகிவிட்டால் வடிகட்டி குழம்பில் சேர்க்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  4. நன்றாக வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. ஹோட்டல் ஸ்டைல் மிக்ஸடு வெஜிடபிள் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்