வீடு / சமையல் குறிப்பு / கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு

Photo of Chicken Thokku/South Indian Chicken Curry by Priya Suresh at BetterButter
834
27
0.0(0)
0

கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு

Mar-02-2016
Priya Suresh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கிலோ கோழி
  2. 2 எண்ணிக்கை வெங்காயம் (நறுக்கப்பட்டது)
  3. 1 தேக்கரண்டி இஞ்சி -பூண்டு விழுது
  4. 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  5. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  7. 2 எண்ணிக்கை முழு மசாலாக்கள் (பே இலைகள், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை)
  8. 2 தேக்கரண்டி வெனிகர்/பால்சாமிக் வெனிகர்
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. தேவையான அளவு எண்ணெய்
  11. நறுக்கப்பட்டக் கொத்துமல்லி இலைகள்
  12. வறுப்பதற்கும் அரைப்பதற்கும்:
  13. 1 தேக்கரண்டி மல்லி
  14. 1 தேக்கரண்டி மிளகு
  15. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்

வழிமுறைகள்

  1. கோழியை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைப் பழச்சாறு ஆகிவற்றுடன் ஒரு மணிநேரம் பதப்படுத்தவும்.
  2. ஒரு வானலியில், போதுமான எண்ணெயை சூடுபடுத்தி மசாலா அனைத்தையும் வறுக்கவும். உடனடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை இஞ்சி-பூண்டு விழுதுடன் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். வெந்துகொண்டிருக்கும் காய்கறிகளோடு பதப்படுத்தியக் கோழியைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  3. இதற்கிடையில் பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் வெறுமனே வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. கோழியைச் சிம்மின் வேகவைக்கவும், பாதியளவு வேகும்வரைக்கும். இப்போது புதிதாக அரைத்த மசாலாப்பொடி, வெனிகர் சேர்த்து எல்லாவற்றையும் மீண்டும் சில நிமிடங்கள் நடுத்தர தீயில் எண்ணெயில் சிக்கன் தொக்கில் இருந்து விளகும்வரை வேகவைக்கவும்.
  5. கொத்துமல்லி சேர்த்து அடுப்பை நிறுத்தவும். சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்