வீடு / சமையல் குறிப்பு / சோயா சுக்கா

Photo of Soya chunks chukka by Asiya Omar at BetterButter
1
5
0(0)
0

சோயா சுக்கா

Feb-20-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோயா சுக்கா செய்முறை பற்றி

வெஜ் பிரியர்களுக்கு சிக்கன்,மட்டன் சாப்பிட்ட திருப்தியை இந்த சோயா சுக்கா தரும்.செய்து பாருங்க.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • మెక్సికన్
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோயா மீல் மேக்கர்-100 கிராம்
  2. வெங்காயம்-100 கிராம்
  3. தக்காளி -100 கிராம்
  4. பச்சை மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா- 1/4 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/4தேக்கரண்டி
  8. மிளகுத்தூள் - 1/2தேக்கரண்டி
  9. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  10. பெருஞ்சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  11. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  12. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  13. உப்பு - தேவைக்கு
  14. எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
  15. மல்லி கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. சோயா உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொதிக்கும் நீர் விட்டு மூடி வைக்கவும்.ஐந்து நிமிடத்தில் பொங்கி இரண்டு மடங்காக விரிந்து விடும்.பிழிந்து எடுக்கவும்.
  2. வெங்காயம்,தக்காளி,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  4. அடுத்து பச்சை மிளகாய்,தக்காளி சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மூடவும்.மசிந்து வரட்டும்.
  5. விரும்பினால் சோயா உருண்டைகளை பாதியாக நறுக்கி வைக்கவும்.
  6. தக்காளி வதங்கியதும் தேவையான பொருட்களில் சொன்ன மசாலா அனைத்தும் சேர்த்து பிரட்டவும்.
  7. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.மூடி போட்டு மசாலா வாடை சிறிது அடங்க விடவும்.அத்துடன் சோயா உருண்டை சேர்த்து பிரட்டவும்
  8. மசாலா ஒன்று சேர்ந்து வர வேண்டும்.நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
  9. சுவையான சோயா சுக்கா தயார். வெரைட்டி ரைஸ், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.ஏன் சும்மாவே சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்