முந்திரி கோழி குருமா | Cashew Chicken Korma in Tamil

எழுதியவர் Sarenya Dhevi  |  5th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Cashew Chicken Korma by Sarenya Dhevi at BetterButter
முந்திரி கோழி குருமாSarenya Dhevi
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

156

0

Video for key ingredients

    முந்திரி கோழி குருமா recipe

    முந்திரி கோழி குருமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Cashew Chicken Korma in Tamil )

    • அலங்காரத்திற்காக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
    • சுவைக்கேற்ற உப்பு
    • கசகசா 1 தேக்கரண்டி
    • முந்திரி பருப்பு 6-7
    • தேங்காய் பால் 1/2 கப்
    • ஏலக்காய், இலவங்கப்பட்டை கிராம்பு ஒவ்வொன்றிலும் 1
    • கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
    • மல்லித் தூள் 2 தேக்கரண்டி
    • மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
    • இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
    • பச்சை மிளகாய் 2 பிளந்தது
    • நறுக்கப்பட்ட தக்காளி 2
    • நறுக்கப்பட்ட வெங்காயம் 2
    • கோழி 250 கிராம்

    முந்திரி கோழி குருமா செய்வது எப்படி | How to make Cashew Chicken Korma in Tamil

    1. கசகசா, முந்திரிபருப்புடன் சற்றே சூடாக உள்ள பாலைச் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
    2. ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்க்கவும். அதன்பிறகு நறுக்கப்பட்ட வெங்காயம், பிளந்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    3. இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாடை போனதும் நறுக்கப்பட்ட தக்காளி, கோழி மற்றும அனைத்து மசாலாத் தூளையும் சேர்க்கவும்.
    4. நன்றாகக் கலந்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து மூடி 4 விசில்களுக்கு வேகவைத்து தீயை அணைக்கவும்.
    5. விசில் வந்ததும் அரைத்த சாந்து, தேங்காய் பால் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
    6. நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

    எனது டிப்:

    முந்திரிபருப்பையும் கசகசாவையும் சூடான பாலில் 15 நிமிடங்கள் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். நன்றாக அரைத்தால் உயர்தரமான கிரீம்போன்ற சாந்து கிடைக்கும்.

    Reviews for Cashew Chicken Korma in tamil (0)