வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தொக்கு

Photo of Ridge gaurd by Rukshana Ruks at BetterButter
431
4
0.0(0)
0

பீர்க்கங்காய் தொக்கு

Feb-23-2018
Rukshana Ruks
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தொக்கு செய்முறை பற்றி

பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான ஃபைபர் நிறைந்த காய்கறியாகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கங்காய் – ஒரு கப்
  2. எண்ணெய் – ஒரு தேகரண்டி
  3. கடுகு – அரை டீஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
  5. உப்பு – தேவைகேற்ப
  6. மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
  7. குழம்பு மசாலா தூள் – அரை டீஸ்பூன்
  8. தக்காளி – ஒன்று (நறுக்கியது)
  9. பூண்டு – ஐந்து பல்
  10. சின்ன வெங்காயம் – கால் கப்
  11. கொத்தமல்லி – சிறிதளவு

வழிமுறைகள்

  1. தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  3. பின், பீர்க்கன்க்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. நான்கு நிமிடம் வதக்கிய பின்னர், மிளகாய் தூள், குழம்பு மசாலா தூள், தக்காளி மற்றும் பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  5. இன்னொரு கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பீர்க்கங்காய் கலவையுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்