Photo of Potato Papad Gravy by Sony Karthik at BetterButter
450
4
0.0(1)
0

Potato Papad Gravy

Feb-26-2018
Sony Karthik
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Potato Papad Gravy செய்முறை பற்றி

நம்ம வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிட கூடிய ருசியான அப்பள குழம்பு..வீட்டில பொரித்து மீதி அப்பளம் இருந்தால் கூட உடனே அப்பள குழம்பு ரெடி பண்ணிறலாம்......இதில குட்டீஸ். க்கு பிடிச்ச உருளைக்கிழங்கு போட்டு பண்ணறதுனால குட்டீஸ் க்கு ரொம்ப பிடிக்கும்..எப்படி பண்ணறதுன்னு பாக்கலாமா....முதல்ல நம்ம தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து வைத்து கொள்வோம்.....இப்போ ஒரு பாத்திரத்தில் 2 உருளைக்கிழங்கை போட்டு வேக வைக்கலாம்...ஒரு கடாயில் 2தேக்கரண்டி நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு,வெந்தயம்,வேர்க்கடலை, 2 மிளகாய் வற்றல், சேர்த்து நல்ல வதக்குங்க...அப்புறம் இதுல நம்ம அப்பளத்தை 2அல்லது 3றாக உடைத்து உள்ளே போட்டு அது நல்ல பொரிந்து வரும் வரை காத்திருக்கவும்....இப்போ நம்ம எடுத்து வைத்துள்ள மசாலாக்கள்மற்றும் புளி கரைசலை இதில் சேர்த்து நல்ல கலக்கவும்....குழம்பு இப்போ நல்ல கொதிக்கும் போது கொஞ்சம் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தழைகளை போடவும்...வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்...இந்த உருளைக்கிழங்கை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்..இப்போ அரிசி மாவை தண்ணீரில் கலக்கி விடவும்.... குழம்பு கிளறி விட வேண்டாம்.... அப்பளமும் ,கிழங்கும் நல்ல பதத்திற்கு வந்து விட்டது.... ஒரு ஜோரான, நல்ல எண்ணெய் சேர்த்து இருப்பதால் நல்ல மணமான, குழம்பு ரெடி.....

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2தேக்கரண்டி நல்ல எண்ணெய்
  2. 5 அப்பளம்
  3. 1மேஜைக்கரண்டி கடுகு
  4. 1மேஜைக்கரண்டி வெந்தயம்
  5. 1மேஜைக்கரண்டி வேர்க்கடலை
  6. 2மிளகாய் வத்தல்...
  7. 1சில் தேங்காய்
  8. 2 உருளைக்கிழங்கு
  9. 1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள்
  10. 1மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள்
  12. 1 மேஜைக்கரண்டி சாம்பார் பொடி
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. கொஞ்சம் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை
  15. ஒரு நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைசல் செய்து கொள்ளவும்
  16. 1 மேஜைக்கரண்டி அரிசி மாவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்
  2. ஒரு பாத்திரத்தில் 2 உருளைக்கிழங்கை போட்டு வேக வைக்கவும்.
  3. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்ல எண்ணெய் ஊற்றி , கடுகு, வெந்தயம்,வேர்க்கடலை, 2 மிளகாய் வற்றல், தாளித்து அதில் அப்பளத்தை 2 அல்லது 3ன்றாக உடைத்து உள்ளே போட்டு அது பொரிந்து வரும் வரை காத்திருக்கவும்.
  4. மசாலாக்கள்மற்றும் புளி கரைசலை இதில் சேர்த்து கலக்கவும்....
  5. குழம்பு இப்போ நல்ல கொதிக்கும் போது கொஞ்சம் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை தழைகளை போடவும்...
  6. வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்...
  7. இந்த உருளைக்கிழங்கை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்..இப்போ அரிசி மாவை தண்ணீரில் கலக்கி குழம்பில் விடவும்.... குழம்பு கிளறி விட வேண்டாம்.... அப்பளமும் ,கிழங்கும் நல்ல பதத்திற்கு வந்து விட்டது....
  8. நல்ல மணமான, குழம்பு ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Feb-27-2018
Maharasi Devendiran   Feb-27-2018

Different taste .......

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்