வீடு / சமையல் குறிப்பு / சீனியவரைக்காய் / கொத்தவரங்காய் வத்தல்

Photo of Cluster beans vathal by Krishnasamy Vidya Valli at BetterButter
787
2
0.0(0)
0

சீனியவரைக்காய் / கொத்தவரங்காய் வத்தல்

Feb-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீனியவரைக்காய் / கொத்தவரங்காய் வத்தல் செய்முறை பற்றி

மதியம் எல்லாம் இப்பொழுது நன்றாக வெயில் அடிக்கிறது. அதை வீணாக்காமல் வத்தல்கள் போட்டு சேமித்து வைக்கலாம்.இந்த வத்தல் குறிப்பாக கம்பங்கூழ் /கேப்பைகூழ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும். கடையில் வாங்குவதை விட அதிக சுவையுடன் இருக்கும். வத்தல் காயவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீனியவரைக்காய் -1/4 கிலோ
  2. நல்ல புளித்த தயிர் -1 கப்
  3. உப்பு -1 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சீனியவரைக்காயை நன்றாக அலம்பி காம்பு கிள்ளிக்கொள்ளவும்
  2. கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வைத்திருந்து வடிகட்டிக்கொள்ளவும்
  3. தயிரில் உப்பு கலந்து அதில் சீனியவரைக்காயை போட்டு பிரட்டி கொள்ளவும்
  4. இந்த கலவையை வெயிலில் காயவைத்து எடுக்கவும்
  5. சருகாக காய்ந்ததும் டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்