Photo of Spinach in Coconut Milk by Shaima Fathima at BetterButter
492
8
0.0(1)
0

Spinach in Coconut Milk

Feb-26-2018
Shaima Fathima
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Spinach in Coconut Milk செய்முறை பற்றி

கீரை மற்றும் தேங்காய்ப்பாலில் செய்யப்படும் இந்த கூட்டு அனைத்து விதமான சாதங்களுடனும் பரிமாறலாம். ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த கூட்டை அனைவரும் முயற்சித்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீரை -1 கட்டு
  2. தேங்காய் - 1/2 மூடி தேங்காய்
  3. எண்ணை -1 மேஜைக்கரண்டி
  4. ஜீரகத்தூள் -1/4 தேக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் - 1/2 பகுதி
  6. பூண்டு பெரியபல் - 3
  7. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1 .முதலில் கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி வைக்கவேண்டும்.
  2. 2.தேங்காவை துருவி 1/4கப் தண்ணீர் விட்டு அரைத்து முதல் பாலை தனியாக கட்டியாக எடுத்து வைக்க வேண்டும்.
  3. 3.பின் இரண்டாவது பாலுக்கு கொஞ்சம் தண்ணீர் விட்டு 1/2கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  4. 4.பூண்டை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்;வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
  5. 5.அடுப்பில் வாணலி வைத்து அதில் கீரை, வெங்காயம் ,பூண்டுடன் இரண்டாவதாக எடுத்து வைத்துள்ள தே.பாலை சேர்த்து நன்றாக சிறிய தீயில் வேக விடவும்.
  6. 6.கீரை வெந்து வரும்போது நன்றாக மசித்து(கடைந்து)எடுக்க வேண்டும்.
  7. 7.அடுத்து ஜீரகத்தூள், உப்பு சேர்த்து முதல் பாலை சேர்த்து தேங்காய் எண்ணைய் ஊற்றி கிளறி இறக்கி விடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Obaidullah Peer
Feb-26-2018
Obaidullah Peer   Feb-26-2018

nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்