வீடு / சமையல் குறிப்பு / காய்கறி கலவை சாதம்

Photo of Vegetable mixed rice by Sony Karthik at BetterButter
737
6
0.0(0)
0

காய்கறி கலவை சாதம்

Feb-27-2018
Sony Karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி கலவை சாதம் செய்முறை பற்றி

ரொம்ப அருமையான காய்கறி கலவை சாதம்..... எல்லா காய்கறியும் போட்டு பண்ணறதுனால ரொம்ப ருசியா இருக்கும் குட்டீஸ்.க்கு ரொம்ப சத்தான சாதம்....முதலில் குக்கரில் 3 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி துவரம் பருப்பை வேக வைக்க அதற்குகேற்ப தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.....இப்போ காய்கறிகளை நன்கு கழுவி வெட்டி எடுத்து கொள்ளவும்....கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு அதில் காய்கறிகள் அனைத்தும் போட்டு நன்றாக வதக்கவும்...இப்போ பருப்பு கொதிக்கும் அரிசி சேர்த்து அதற்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்....காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும்...இப்போ நம்ம எடுத்து வைத்துள்ள மசாலாகளை இதில் சேர்த்து கலக்கவும்.....சிறிதளவு புளி கரைசலை சேர்க்கவும்...இப்போ கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி வைக்கவும்....செம சூடான ருசியான காய்கறி கலவை சாதம்......

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. 200 கிராம் துவரம் பருப்பு
  3. சிறிதளவு புளி கரைசல்
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 3 தக்காளி
  6. 2 கத்திரிக்காய்
  7. 4 அவரைக்காய்
  8. 3 உருளைக்கிழங்கு
  9. 1 வாழைக்காய்
  10. 4 பீன்ஸ்
  11. 4 மேஜைக்கரண்டி சாம்பார் பொடி
  12. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  13. 3 கப் அரிசி
  14. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் 3 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி துவரம் பருப்பை வேக வைக்க அதற்கேற்ப தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
  2. காய்கறிகளை நன்கு கழுவி வெட்டி எடுத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு அதில் காய்கறிகள் அனைத்தும் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. பருப்பு கொதிக்கும் பொழுது அரிசி சேர்த்து அதற்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  5. காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  6. இப்போ நம்ம எடுத்து வைத்துள்ள மசாலாகளை இதில் சேர்த்து கலக்கவும்.
  7. சிறிதளவு புளி கரைசலை சேர்க்கவும்.
  8. இப்போ கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி வைக்கவும்.
  9. செம சூடான ருசியான காய்கறி கலவை சாதம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்