வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் அல்வா

Photo of Beetroot Halwa by Ashwini Rajendran at BetterButter
323
5
0.0(0)
0

பீட்ரூட் அல்வா

Feb-27-2018
Ashwini Rajendran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் அல்வா செய்முறை பற்றி

பீட்ரூட் பொரியல், மசாலா என எத்தனை இருந்தாலும், பீட்ரூட்டை வைத்து அல்வா செய்தால் தனி ருசி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 500 கிராம்
  2. சக்கரை 350 கிராம்
  3. பால் 200 மில்லி லிட்டர்
  4. நெய் 50 கிராம்
  5. முந்திரி பருப்பு 50 கிராம்
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. பீட்ரூட் தோல் சீவி துருவி கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் துருவிய பீட்ரூட், பால், ஏலக்காய், உப்பு சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.
  3. வேக வைத்த பீட்ரூட்டை ஒரு கனமான பாத்திரத்தில் மாற்றவும்.
  4. பீட்ரூட்டில் தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
  5. தண்ணீர் வற்றிய பின் சக்கரை சேர்த்து கை விடாமல் கிளறவும்.
  6. சக்கரை கரைந்து தண்ணீர் வற்றி அல்வா பதம் வரும் வரை கிளறவும்.
  7. பதம் வந்தவுடன் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
  8. ஒரு கடாயில் நெய் சூடு செய்து முந்திரி பருப்பு பொன்னிறமாக வறுத்து அல்வாவில் சேர்த்து கிளறவும்.
  9. அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்