டிபன் சாம்பார் | Tiffin Sambhar in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Tiffin Sambhar by Lakshmi Vasanth at BetterButter
டிபன் சாம்பார்Lakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

139

0

Video for key ingredients

    டிபன் சாம்பார் recipe

    டிபன் சாம்பார் தேவையான பொருட்கள் ( Ingredients to make Tiffin Sambhar in Tamil )

    • தாளிப்புக்கு – கடுகு மற்றும் கரிவேப்பிலை
    • மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
    • மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி
    • சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
    • சீரகம் – ½ தேக்கரண்டி
    • எள்ளு விதை - 3 தேக்கரண்டி
    • சாந்தாக அரைத்துக்கொள்ளவும்: தக்காளி – 2எண்ணிக்கை
    • கொத்துமல்லி இலைகள்
    • சுவைக்கு உப்பு
    • சர்க்கரை – 2 தேக்கரண்டி
    • தேங்காய் பால் – 2 தேக்கரண்டி
    • சோளமாவு – 1 தேக்கரண்டி
    • வெங்காயம் – 1 எண்ணிக்கை

    டிபன் சாம்பார் செய்வது எப்படி | How to make Tiffin Sambhar in Tamil

    1. தக்காளியை கால்கால் பங்காக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பிளடரில் தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, மல்லித்தூள், எள்ளு விதை, சீரகம் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்க.
    2. ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு மிளகு கரிவேப்பிலை சேர்க்கவும் – பொறிய ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள சாந்தைச் சேர்க்கவும். பிளண்டரை 3 கப் தண்ணீரால் கழுவி இந்தத் தண்ணீரை சாந்துடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
    3. பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை கொதிக்க வைப்பதற்காக வைத்துள்ள இந்த கலவையுடன் சேர்க்கவும். (வெங்காயத்தை எண்ணெயில் வறுக்கவேண்டாம், சுவை மாறிவிடும்). உப்பு, சர்க்கரை, சாம்பார் பொடியை இந்த சமயத்தில் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
    4. வெங்காயம் பளிச்சென்று ஆனதைப் பார்த்ததும் – 1 கப் தண்ணீரில் சோளமாவு தேங்காய்ப்பால் கலவையைச் செய்து நன்றாகக் கலக்கிக்ககொள்ளவும். கொதிக்கும் சாம்பாரில் இந்தக் கலவையைச் சேர்த்துத் தொடர்ந்து கிண்டவும்.
    5. சாம்பார் அடர்த்தியாவதை நீங்கள் பார்ப்பீர்கள். சாம்பார் பதத்தை நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப சரிசெய்துகொள்ளலாம். இப்போது இந்த கலவையை 3 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். தீயிலிருந்து இறக்கி கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
    6. இட்லி/மெது வடையோடு சூடாகப் பரிமாறவும். குறிப்பு: இந்தச் சாம்பாருடன் பெருங்காயம் சேர்க்காதீர்கள், ருசி நன்றாக இருக்காது.

    Reviews for Tiffin Sambhar in tamil (0)