வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் இட்லி

Photo of Ladies Finger (Okra) Idli by Ayesha Ziana at BetterButter
233
9
0.0(0)
0

வெண்டைக்காய் இட்லி

Mar-14-2018
Ayesha Ziana
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் இட்லி செய்முறை பற்றி

வெண்டைக்காய் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்தது. நினைவாற்றலை அதிகரிக்கும் குணம் கொண்டது. எனவே வளரும் குழந்தைகளுக்கு மிகவும் தேவையானது. இந்த குறிப்பானது, இட்லி மாவுடன் அரைத்த வெண்டைக்காய் கலவையை வைத்து செய்யும் ஆரோக்கியமான இட்லி.

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • ப்லெண்டிங்
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. உளுந்து 3/4 கப்
 2. சம்பா அரிசி 3 கப்
 3. உப்பு தேவைக்கு
 4. வெண்டைக்காய் 15 முதல் 20
 5. இஞ்சி சற்று பெரிய துண்டு
 6. பச்சை மிளகாய் 2 அல்லது தேவைக்கேற்ப
 7. சீரகம் 1 ஸ்பூன் நிறைய

வழிமுறைகள்

 1. உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. பின்பு கிரைண்டரில் உளுந்தை நன்றாக மிருதுவாக பொங்கி வரும் பதத்தில் அரைத்து எடுக்கவும். பின்னர் அரிசியையும் ஓரளவுக்கு அரைத்து எடுக்கவும்.
 3. அரைத்த அரிசியையும் உளுந்தையும் உப்பு சேர்க்காமல் கலந்து 8 முதல் 10 மணி நேரம் மூடி வைக்கவும்.
 4. பின்னர், வெண்டைக்காய், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் மை போல அரைக்கவும்.
 5. அரைத்த கலவையை மாவில் சேர்த்து மேலும் 2 முதல் 3 மணி நேரம் வைத்திருந்து(தேவைப்பட்டால் உடனேயே எடுக்கலாம்), உப்பு சேர்த்து லேசாக கலந்துகொள்ளவும்.
 6. பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லிப்பானையில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
 7. சூப்பரான பஞ்சு போன்ற மென்மையான வெண்டைக்காய் இட்லி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்