வீடு / சமையல் குறிப்பு / கம்பம்புல் சேமியா

Photo of Pearl Millet Semiya by Banupriya Jawahar at BetterButter
499
3
0.0(0)
0

கம்பம்புல் சேமியா

Mar-15-2018
Banupriya Jawahar
500 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பம்புல் சேமியா செய்முறை பற்றி

சோர்வை நீக்கி புத்துணர்வு அளிக்கும் பதார்த்தம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு 1/4கிலோ
  2. நறுக்கிய காய்கறிகள் 1 ௧ப்
  3. தாளிக்க:
  4. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  5. கடுகு 1/2 தேக்கரண்டி
  6. அ.உ.பருப்பு 1 தேக்கரண்டி
  7. ௧.பருப்பு 1 தேக்கரண்டி
  8. வெங்காயம் 1
  9. தக்காளி 1
  10. ப.மிளகாய் 3
  11. கறிவேப்பிலை
  12. நெய் 1 தேக்கரண்டி
  13. முந்திரி 10
  14. மல்லி, புதினா 1 கொத்து
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கம்பை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக ஆட்டவும்
  3. தேவைப்பட்டால் வெள்ளை காட்டன் துணியில் சற்று நேரம் கட்டி தொங்க விடவும்.
  4. பின் இடியாப்பக்குழலில் வைத்து பிழிந்து இடியாப்பமாக வேக வைத்து எடுக்கவும்
  5. வெந்த இடியாப்பத்தை ஆற விடவும்
  6. பீன்ஸ், கேரட், அவரை, கோஸ் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  7. காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக பிரித்து வெந்நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.
  8. பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் இவற்றை தோடு உரித்து வைத்துக் கொள்ளவும்
  9. கடாயில் எண்ணெய் விடவும்
  10. கடுகு, அ. உ. பருப்பு, க. பருப்பு, வெங்காயம், தக்காளி, ப. மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  11. எல்லா காய்கறிகளை சேர்க்கவும்.
  12. உப்பு சேர்த்து கிளறவும்.
  13. மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்
  14. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  15. காய்கறிகள் வெந்ததும், அத்துடன் கம்பு இடியாப்பத்தை உதிர்த்து சேர்க்கவும்
  16. 5 நிமிடங்கள் வரை நன்கு கிளறி விடவும்
  17. நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்
  18. மல்லி, புதினா தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்