ராகி அல்வா | Iron Rich Finger Millet Halwa in Tamil

எழுதியவர் Juvaireya R  |  17th Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Iron Rich Finger Millet Halwa by Juvaireya R at BetterButter
ராகி அல்வாJuvaireya R
  • ஆயத்த நேரம்

    24

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

2

1

ராகி அல்வா recipe

ராகி அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Iron Rich Finger Millet Halwa in Tamil )

  • 250 கிராம் முழு ராகி
  • 200 கிராம் வெல்லம்
  • 3 தேக்கரண்டி நெய்
  • 2 தேக்கரண்டி முந்திரிபருப்பு

ராகி அல்வா செய்வது எப்படி | How to make Iron Rich Finger Millet Halwa in Tamil

  1. ராகியை நன்றாக அலசி அதனை 12 மணி நேரம் தண்ணீரில் உறவைக்கவும்.
  2. பின் ராகியில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி பின் சிறிது தண்ணீர் சேர்த்து மின்கவையில் அரைக்கவும்.
  3. அஅரைத்த கலவையை வடிகட்டவேண்டும்.(துணி அல்லது வடிக்கட்டி)
  4. வடிக்கட்டியதும் அப்பாலை எடுத்து மூடிப்போட்டு 6 மணி நேரம் வைக்கவும்.
  5. 6ணிநேரத்திர்க்கு பின் அப்பாலானதது தெளிந்த தண்ணீர் மேலாகவும் கெட்டியான பால் கீழாக தங்கி இருக்கும்.
  6. அடுப்பை பபற்ற வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி முந்திரிகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  7. பின் அதேகடாயில் ராகி பாலை ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.
  8. பின் வெல்லபாகை அக்கலவையில் ஊற்றவும்.
  9. சிறிது நெய் சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும்.
  10. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைக்கவும்.
  11. பின் ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் போட்டு சமபடுத்தவும்.
  12. அல்வாவை மூடி போட்டு சிறிது நேரம் ஓரமாக வைக்கவும்
  13. பின் வறுத்த முந்திரியை அல்வாவின் மேல் அலங்கரித்து கத்தியால் துண்டுகள் இட்டு பரிமாறவும்.
  14. சுவையான இரும்பு சத்து நிறைந்த பண்டம் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான பண்டம் தயார்.

Reviews for Iron Rich Finger Millet Halwa in tamil (1)

Vasuyavana a year ago

Yummy
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.