வீடு / சமையல் குறிப்பு / Iron Rich Finger Millet Halwa

Photo of Iron Rich Finger Millet Halwa by Juvaireya R at BetterButter
469
7
0.0(1)
0

Iron Rich Finger Millet Halwa

Mar-17-2018
Juvaireya R
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Iron Rich Finger Millet Halwa செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த ராகி அல்வா மற்றும் வெல்லம் சேர்த்தது எனவே நம் 10 மாத குழந்தை முதல் அனைவரும் உண்ண கூடிய பண்டம். இதனை அதிக படியாக நம் பள்ளி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் என்னெறால் நாள் முழுவதும் கலைத்து போய் வரும் நம் செல்வங்களுக்கு மிகவும் தெம்பாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • தமிழ்நாடு
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. 250 கிராம் முழு ராகி
 2. 200 கிராம் வெல்லம்
 3. 3 தேக்கரண்டி நெய்
 4. 2 தேக்கரண்டி முந்திரிபருப்பு

வழிமுறைகள்

 1. ராகியை நன்றாக அலசி அதனை 12 மணி நேரம் தண்ணீரில் உறவைக்கவும்.
 2. பின் ராகியில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி பின் சிறிது தண்ணீர் சேர்த்து மின்கவையில் அரைக்கவும்.
 3. அஅரைத்த கலவையை வடிகட்டவேண்டும்.(துணி அல்லது வடிக்கட்டி)
 4. வடிக்கட்டியதும் அப்பாலை எடுத்து மூடிப்போட்டு 6 மணி நேரம் வைக்கவும்.
 5. 6ணிநேரத்திர்க்கு பின் அப்பாலானதது தெளிந்த தண்ணீர் மேலாகவும் கெட்டியான பால் கீழாக தங்கி இருக்கும்.
 6. அடுப்பை பபற்ற வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி முந்திரிகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 7. பின் அதேகடாயில் ராகி பாலை ஊற்றி கட்டியில்லாமல் கிளறவும்.
 8. பின் வெல்லபாகை அக்கலவையில் ஊற்றவும்.
 9. சிறிது நெய் சேர்த்து கட்டியில்லாமல் கிளற வேண்டும்.
 10. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைக்கவும்.
 11. பின் ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் போட்டு சமபடுத்தவும்.
 12. அல்வாவை மூடி போட்டு சிறிது நேரம் ஓரமாக வைக்கவும்
 13. பின் வறுத்த முந்திரியை அல்வாவின் மேல் அலங்கரித்து கத்தியால் துண்டுகள் இட்டு பரிமாறவும்.
 14. சுவையான இரும்பு சத்து நிறைந்த பண்டம் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான பண்டம் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்