வீடு / சமையல் குறிப்பு / கருப்பு முழு உளுந்து வெஜிடபிள் ரைஸ்

Photo of Black urad Dal vegetable rice by Krishnasamy Vidya Valli at BetterButter
437
4
0.0(0)
0

கருப்பு முழு உளுந்து வெஜிடபிள் ரைஸ்

Mar-18-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கருப்பு முழு உளுந்து வெஜிடபிள் ரைஸ் செய்முறை பற்றி

நெல்லையின் மிகவும் பிரபலமான உளுந்தம்பருப்பு சாதத்தை என்னுடைய ஸ்டைலில் காய்கள் சேர்த்து நோ ஆனியன் நோ கார்லிக் ரெசிபியாக செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கருப்பு முழு உளுந்து -1/8 கப்
  2. பச்சரிசி -1/4 கப்
  3. காய்கள் -1/4 கப் (பீன்ஸ்,கேரட்,பட்டாணி,உருளைக்கிழங்கு)
  4. உப்பு -1/4 தேக்கரண்டி
  5. வறுத்து திரிக்க
  6. எள்ளு -1 தேக்கரண்டி
  7. தேங்காய் துருவல் -3 தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  9. மிளகாய் வத்தல் -1
  10. கட்டிப்பெருங்காயம் -1 சிறிய துண்டு
  11. தாளிக்க
  12. நல்லெண்ணெய் -1/2 தேக்கரண்டி
  13. கடுகு -1/4 தேக்கரண்டி
  14. உளுத்தம் பருப்பு -1/4 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை -1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுக்கவும்
  2. ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  3. வெறும் கடாயில் உளுந்தை இரண்டு நிமிடம் வறுக்கவும்
  4. அரிசியையும் ஒரு நிமிடம் வறுக்கவும்
  5. இரண்டையும் காய்கள் உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வேக வைக்கவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்ததை சேர்த்து கிளறவும்
  7. திரித்ததை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து விடவும்
  8. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிட கொடுக்கலாம் . விருப்பப்பட்டால் தயிர் சாலட் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்