வீடு / சமையல் குறிப்பு / பிளேக் ஃபாரஸ்ட் கேக்

Photo of Black Forest Cake by Bena Aafra at BetterButter
521
4
0.0(0)
0

பிளேக் ஃபாரஸ்ட் கேக்

Apr-24-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிளேக் ஃபாரஸ்ட் கேக் செய்முறை பற்றி

கேக் என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை பிடிக்கும்.அவற்றை வீட்டில் செய்து சாப்பிடுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு-2கப்
  2. கோகோ பவுடர் - 3/4கப்
  3. பேக்கிங் பவுடர் -2டீஸ்பூன்
  4. பேக்கிங் சோடா -1டீஸ்பூன்
  5. உப்பு -1/2டீஸ்பூன்
  6. சர்க்கரை -2கப்
  7. பால்-1கப்
  8. எண்ணெய் -1/2கப் or பட்டர்-100கிராம்
  9. முட்டை -3
  10. வெனிலா எசென்ஸ்-2டீஸ்பூன்
  11. க்ரீம்;
  12. விப்ரோ க்ரீம் -100மி.லி
  13. பவுடர் சர்க்கரை -3/4கப்
  14. வெனிலா எசென்ஸ் -1டீஸ்பூன்
  15. அலங்கரிக்க:
  16. செர்ரி
  17. சக்லெட்

வழிமுறைகள்

  1. முதலில் அனைத்து பொருட்களையும் ரூம் டெம்ரேச்சரில் வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பவுலில் மைதா மாவு,சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, கோகோ பவுடர், இவற்றை சலித்து வைத்து கொள்ளவும்.
  3. கரண்டியால் கிளறவும். பின் அவற்றில் முட்டை, எண்ணெய் அல்லது பட்டர்,வெனிலாஎசென்ஸ் சேர்த்து கிளறவும்.
  4. பேஸ்ட் போல் கட்டி இல்லாமல் செய்து கொள்ளவும்.
  5. பின் பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி மைதா மாவு தூவி தயார் படுத்திக் கொள்ளவும்.
  6. பின் கேக் பேஸ்ட் -ஐ அதில் ஊற்றி சரிசமமாக படுத்திக் கொள்ளவும்.
  7. பின் ஓவனை 180°செல்சியஸ் 10நிமிடம் வைத்து முன்சூடு செய்து கொள்ளவும்.
  8. பின் கேக் ட்ரேயை வைத்து 30நிமிடம் வைத்து பேக் செய்யவும். பின் கேக் தயார் ஆனதும் வெளியில் எடுத்து ஆறவைக்கவும்.
  9. ஓவன் இல்லையென்றால் குக்கரில் வைக்கவும். குக்கரில் சிறிது மண் அல்லது கல் உப்பு சேர்த்து அவற்றில் வைத்து பேக் செய்யவும்.
  10. குக்கரில் ரப்பர், விசில் போடாமல் செய்யவும்.
  11. குக்கரில் செய்யும்பொழுதும் 30நிமிடம் வைத்து பேக் செய்யவும்.
  12. க்ரீம் செய்யும் முன் க்ரீம் செய்யும் பாத்திரத்தை ப்ரீசரில் வைத்து எடுத்து க்ரீம் செய்யவும்.
  13. க்ரீம் செய்வது; விப் க்ரீம் -ஐ ஒரு பவுலில் ஊற்றி அதில் பவுடர் சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். பீட்டர் வைத்து செய்யவும். அல்லது எலெக்ட்ரானிக் பீட்டர் வைத்து செய்யவும்.
  14. சிறிது வெனிலா எசென்ஸ் சேர்த்து கொள்ளவும். திக்காக வந்ததும் கேகில் தடவி மேலே சாக்லேட் தூவி விட்டு, செர்ரி பழம் வைக்கவும்.
  15. பிளேக் ஃபாரஸ்ட் கேக் ரெடி. .....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்