பருப்பு உசிலி | Paruppu Usili in Tamil

எழுதியவர் Amrita Iyer  |  27th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paruppu Usili by Amrita Iyer at BetterButter
பருப்பு உசிலிAmrita Iyer
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

107

0

பருப்பு உசிலி recipe

பருப்பு உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Paruppu Usili in Tamil )

 • 3 காய்ந்த மிளகாய்
 • 1 மற்றும் 1/2 தேக்கரண்டி கடுகு
 • 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 4 தேக்கரண்டி ரிபைண்டு எண்ணெய்
 • 2 தேக்கரண்டி பெருங்காயம்
 • 4 தேக்கரண்டி உப்பு
 • 1 மற்றும் 1/2 கப் துவரம்பருப்பு
 • 2 கப் பீன்ஸ்/கொத்தவரை, கழுவப்பட்டு, வேகவைத்து நறுக்கப்பட்டது

பருப்பு உசிலி செய்வது எப்படி | How to make Paruppu Usili in Tamil

 1. துவரம்பருப்பைத் தயார் செய்ய 3 கப் தண்ணீரில் 5-6 மணி நேரங்களுக்கு அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டி 1 காய்ந்த மிளகாய் சேர்த்து கரடுமுரடாக தேவைப்பட்டால் 3-4 தேக்கரண்டி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
 2. 2 தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி பெருங்காயம், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் தடவி அல்லது ஒரு ''வானலியில்'' அல்லது ஒரு தட்டில் கொஞ்சம் எண்ணெய்விட்டு சாந்தை அதில் ஊற்றவும். 15-20 நிமிடங்கள் கெட்டியாகும்வரை வேகவைக்கவும்.
 3. அறையின் வெப்பத்திற்கு ஆறவிட்டு கைகளால் கட்டிக்கட்டியாக உடைத்துக்கொள்ளவும். கட்டிகள் நேர்த்தியாக இருக்கவேண்டியது அவசியமில்லை.
 4. 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி துவரம்பருப்புக் கட்டிகளைப் போடவும். 3-4 நிமிடங்கள் கட்டிகளை சற்றே இறுகவும் நன்றாக வேகவும் வதக்கவும். பச்சை வாடை மறைந்து அப்படியே சாப்பிட ருசியாக மாறும். ஆறுவதற்காக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
 5. உசுலி தயாரிப்பதற்கு, 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு காய்ந்த மிளகாய் சேர்க்கவும். வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயம் சேர்த்து 1 நிமிடம் கலக்கி நறுக்கப்பட்ட கொத்தவரையைச் சேர்க்கவும்.
 6. மேலும் ஒரு நிமிடம் கலக்கி மீதமுள்ள உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும். கலக்கி, மூடி, சிறு தீயில் 4-5 நிமிடங்கள் கொத்தவரை வேகும்வரை வேகவைக்கவும். இப்போது வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து மிக மெதுவாக கலக்கவும்.
 7. மூடி 3-4 நிமிடங்கள் மேலும் வேகவைத்து தீயை நிறுத்தவும்.
 8. உங்களுக்குப் பிடித்தமானவற்றோடு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Reviews for Paruppu Usili in tamil (0)