வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு நண்டு மசாலா

Photo of Chettinadu Crab Masala by Bena Aafra at BetterButter
389
5
0.0(0)
0

செட்டிநாடு நண்டு மசாலா

May-09-2018
Bena Aafra
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு நண்டு மசாலா செய்முறை பற்றி

நண்டு மிகவும் உடலுக்கு நல்லதொரு உணவு. ஜலதோஷத்தை போக்கும் நண்டு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு
  2. சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
  3. பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது )
  4. தக்காளி (பொடியாக நறுக்கியது )
  5. கடுகு
  6. வரமிளகாய்
  7. கறிவேப்பிலை
  8. எண்ணெய்
  9. உப்பு
  10. மஞ்சள் தூள்
  11. மிளகாய் தூள்
  12. மல்லி தூள்
  13. சோம்பு
  14. அரைக்க மசாலா :
  15. பட்டை-1
  16. ஏலக்காய் -3
  17. கிராம்பு -1
  18. சோம்பு
  19. மிளகு
  20. தேங்காய் துருவல்
  21. மல்லி
  22. வரமிளகாய்

வழிமுறைகள்

  1. முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. வாணலியை அடுப்பில் வைத்து பட்டை,ஏலக்காய், கிராம்பு, சோம்பு,சீரகம், மிளகு, மல்லி சேர்த்து வறுத்து கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  3. பின் ஆரவைத்து அரைத்து கொள்ளவும்.
  4. பின் வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை ,வரமிளகாய், வெங்காயம் ,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  5. பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் நண்டு சேர்த்து கொள்ளவும்.
  6. அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ,சேர்த்து கிளறவும்.
  7. பிறகு அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  8. நண்டை 15நிமிடம் வேகவைக்க வேண்டும்.
  9. பிறகு மல்லி இழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்