வீடு / சமையல் குறிப்பு / Thalai kari boti kulambu & thalai kari boti ratham varuval

Photo of Thalai kari boti kulambu & thalai kari boti ratham varuval by senthil vanan at BetterButter
1453
5
0.0(3)
0

Thalai kari boti kulambu & thalai kari boti ratham varuval

May-16-2018
senthil vanan
2400 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Thalai kari boti kulambu & thalai kari boti ratham varuval செய்முறை பற்றி

இது எங்க சேலம் கிராமத்தில் செய்யும் உணவு. செய்யும் நேரம் அதிகம். ஆனால் தனி ருசி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஆட்டு தலை - 1
  2. ஆட்டு குடல் - 1 kg
  3. இரத்தம் - 2 கப்
  4. சின்ன வெங்காயம் - 300 gms
  5. இஞ்சி - 70 gms
  6. பூண்டு - 60 gms
  7. பச்சை மிளகாய் நறுக்கியது - 8 no
  8. சோம்பு - 3 ஸ்பூன்
  9. கசகசா - 1 ஸ்பூன்
  10. பட்டை - 3 துண்டு
  11. கிராம்பு - 8
  12. மல்லி தூள் - 75 gms
  13. மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  15. தக்காளி நறுக்கியது - 1
  16. தேங்காய் அரைத்தது - 1 கப்
  17. தேங்காய் துருவல் - 1 கப்
  18. கறிவேப்பிலை சிறிது
  19. மல்லி இலை சிறிது
  20. உப்பு தேவையான அளவு
  21. கடலை எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. தலை கறி குடல் குழம்பு.
  2. தலை மற்றும் குடலை நன்றாக கழுவி தனித்தனியாக வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு 1 ஸ்பூன், பட்டை 1, கிராம்பு 4, கசகசா சேர்க்கவும்.
  4. பின்பு சின்ன வெங்காயம் 100 gms சேர்த்து வதக்கவும்.
  5. பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  6. வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. பின்னர் மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
  8. ஆறியதும் கெட்டியாக அரைக்கவும்.
  9. அரைத்த விழுதில் 1 கரண்டி எடுத்து தனியாக வைக்கவும் (இரத்தம் வறுக்க ).
  10. பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  11. பின்னர் அரிந்த வெங்காயம் 100 gms சேர்த்து வதக்கவும்.
  12. பின்பு குடலை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மஞ்சள் சேர்கவும்
  13. தண்ணீர் வற்றி நன்கு வதங்கியதும் அதில் தலை கறியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கவும். மூளை சேர்க்க வேண்டாம்.
  14. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து 50 நிமிடம் வேக வைக்கவும்.
  15. பின்பு தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  16. பச்சை வாசனை போனதும் மல்லி இலை தூவி இறக்கவும்.
  17. 2.தலை குடல் இரத்தம் வறுவல்.
  18. குழம்பில் இருந்து பாதி கறியை எடுத்து தனியாக வைக்கவும் .
  19. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து, அரிந்த வெங்காயம் 100 gms, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  20. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  21. பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  22. பின்னர் எடுத்து வைத்த கறியை சேர்த்து நன்கு வதக்கவும். கொஞ்சம் உப்பு சேர்க்கவும்.
  23. பின்னர் இரத்தத்தை கரைத்து அதில் ஊற்றி நன்கு அடி பிடிக்காமல் கிளறவும்.
  24. கெட்டியாக சுருண்டு வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
  25. மல்லி இலை தூவவும்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diwakar Muthu
May-16-2018
Diwakar Muthu   May-16-2018

Super

mangai mathi
May-16-2018
mangai mathi   May-16-2018

Nyc senthil vanan

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்