வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து மீன் குழம்பு

Photo of Village style fish curry by Priyadharshini Selvam at BetterButter
807
2
0.0(0)
0

கிராமத்து மீன் குழம்பு

May-20-2018
Priyadharshini Selvam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து மீன் குழம்பு செய்முறை பற்றி

கிராமத்து ஸ்டைலில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மீன் - 1/2 கிலோ          
  2. சின்ன வெங்காயம் - 5
  3. தக்காளி - 1 
  4. கறிவேப்பிலை - சிறிது
  5. நல்லெண்ணெய் - தேவைக்கு
  6. புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
  7. கடுகு - 1 டீஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. அரைப்பதற்கு:
  10. தேங்காய் - 1 கப் (துருவியது) 
  11. சின்ன வெங்காயம் - 10
  12. வறுத்து அரைப்பதற்கு:
  13. சீரகம் - 1 டீஸ்பூன்
  14. வரமிளகாய் - 8-10
  15. தனியா - 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து வைக்கவும்.
  2. தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  4. வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைத்து சூடு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும்
  5. அதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  6. பின்பு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடம் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 
  7. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 
  8. அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
  9. குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்