Home / Recipes / Cabbage rice

Photo of Cabbage rice by Krishnasamy Vidya Valli at BetterButter
531
3
0.0(0)
0

Cabbage rice

Nov-24-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage rice RECIPE

முட்டைகோஸ் பருப்பு சேர்த்து செய்யப்படும் ரெசிப்பி இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Fusion
  • Main Dish

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி / பச்சரிசி - 1 / 2 கப்
  2. முட்டைகோஸ் நீளவாக்கில் நறுக்கியது - 2 மேஜைகரண்டி
  3. வெங்காயம் - 1
  4. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  5. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் - 2
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை
  9. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  12. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  13. தயிர் - 2 மேஜைகரண்டி
  14. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  15. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  16. தனியா பொடி-1/4தேக்கரண்டி
  17. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். பச்சரிசி என்றால் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து ஆற விடவும்
  2. கடலைப்பருப்பு துவரம்பருப்பு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்
  3. பின்னர் பருப்பு மிளகாய்வத்தல் பெருங்காயம் பாதியளவு உப்பு தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  4. கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் உதிர்உதிராக வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்
  5. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை மிளகு பொடி சீரகம் தாளிக்கவும். வெங்காயம் முட்டைகோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. உப்பு காஷ்மீர் சில்லிபவுடர் தனியா பொடி சேர்க்கவும்
  7. தயிர் சேர்த்து கிளறவும்
  8. நன்றாக வதக்கியபின் உதிர்த்த பருப்பு கலவையை சேர்த்துநன்றாககிளறவும்
  9. சாதம் சேர்த்து கிளறவும்
  10. விருப்பப்பட்டால் கொத்தமல்லி இலை தூவலாம். காரக்கறியுடன் சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE