Home / Recipes / Dagi Dal rice cake

Photo of Dagi Dal rice cake by Krishnasamy Vidya Valli at BetterButter
675
8
0.0(0)
0

Dagi Dal rice cake

Mar-05-2018
Krishnasamy Vidya Valli
35 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dagi Dal rice cake RECIPE

சிறு தானிய அரிசி ,பருப்பு மற்றும் தயிர் சேர்த்து வித்யாசமான இந்த ஸ்பைசி கேக் செய்துள்ளேன். மாலைநேரத்தில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். டிபனுக்கும் செய்யலாம். ஆவியில் வேகவைப்பதால் ஆரோக்கியமானது. தாளிப்பதற்கு மட்டுமே அதுவும் அரைதேக்கரண்டி எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.சிறுதானிய அரிசி மற்றும் பருப்பு சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம். ஒருவருக்கு நான்கு வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. தினை அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, சிவப்பு அரிசி,கடலைப்பருப்பு,துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 1/8 கப்
  2. தயிர் -2 கப் (சிலும்பல் இல்லாமல்)
  3. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  4. அரைக்க
  5. உப்பு -11/2 தேக்கரண்டி
  6. பச்ச மிளகாய் -2
  7. மிளகாய் வத்தல் -2
  8. இஞ்சி -1 அல்லது 2 சிறிய துண்டுகள்
  9. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  10. மசாலாவிற்கு தேவையானவை
  11. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  12. சீரகம்/கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/4 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  14. வெங்காயம் -1 பெரியது
  15. உருளைக்கிழங்கு -1 பெரியது
  16. தக்காளி -1 பெரியது
  17. கேரட் -1
  18. உப்பு -3/4 தேக்கரண்டி
  19. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  20. கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
  21. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  22. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  23. தாளிக்க
  24. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  25. கடுகு -1/2 தேக்கரண்டி
  26. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  27. சீரகம் -1/2 தேக்கரண்டி
  28. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  29. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி

Instructions

  1. அரிசி பருப்புகளை ரவை பதத்திற்கு மிக்ஸியில் திரிக்கவும்
  2. மிக்ஸியில் அரைக்க கொடுத்தவற்றை சிறிது தயிர் சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த விழுதையும் திரித்ததையும் சேர்த்து தயிரில் கலந்து கொள்ளவும்
  4. இந்த கலவையை அப்படியே அரைமணி நேரம் ஊறவிடவும். ஊறியபின்னர் தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். எனவே தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்/தயிர் சேர்த்துக்கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்
  6. மற்ற காய்கறிகள் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
  7. உப்பு மற்றும் பொடிகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். ஆவியில் வேக வைப்பதால் அதிகமாக வதங்க தேவையில்லை
  8. வட்டமான இரண்டு அங்குல உயரம் உள்ள தட்டில் எண்ணெய் தடவி ஊறவைத்த மாவில் பாதி விட்டுக்கொள்ளவும்
  9. அதன் மேல் காய்கறி கலவையை ஸ்பிரட் செய்யவும்
  10. அதன்மேல் மீதமுள்ள மாவை விட்டு மேல்பறம் தேங்காய் துருவல் தூவி ஆவியில் வேகவைக்கவும்
  11. நன்றாக வெந்ததும் ஆறவைத்து கேக் துண்டுகள் போல் கட் செய்து கொள்ளவும்
  12. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து எல்லா கேக் மேலும் கொத்தமல்லி இலையையும் சேர்த்து தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE