தயிர் சாதம் | Thayir Sadam (Curd Rice) in Tamil

எழுதியவர் Trisha Rudra  |  9th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Thayir Sadam (Curd Rice) by Trisha Rudra at BetterButter
தயிர் சாதம்Trisha Rudra
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

408

0

தயிர் சாதம் recipe

தயிர் சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Thayir Sadam (Curd Rice) in Tamil )

 • சாதம் – கப்
 • தயிர் (குறைந்த கொழுப்புள்ளது அல்லது முழு கொழுப்புள்ளது, இரண்டுமே ஒத்துவரும்) – 2 கப்
 • பால் – 1/4 கப்
 • சர்க்கரை – 2 தேக்கரண்டி (தேவைக்கேற்றபடி சரிசெய்துகொள்ளவும்)
 • உப்பு – 1/2 தேக்கரண்டி
 • துருவப்பட்ட இஞ்சி – 1/2 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை – 10ல் இருந்து 12
 • பெருங்காயம் – 1 தேக்கரண்டி
 • உடைத்த கருப்பு உளுந்து அல்லது உடைத்த துவரம்பருப்பு (கடலைப்பருப்பு அல்லது உளுந்து) – 2 தேக்கரண்டி, ஊறவைத்தது.
 • நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3
 • கடுகு – 1 தேக்கரண்டி
 • சீரகம் – 1/2 தேக்கரண்டி

தயிர் சாதம் செய்வது எப்படி | How to make Thayir Sadam (Curd Rice) in Tamil

 1. சற்றே ’கள் வரை வேகவைப்பதற்கு முன் அரிசியைத் தயார் செய்துகொள்ளவும், சற்றே கூழாக மசிக்கும்போது எளிதில் உடையும் நிலைக்கு. (முன்னரே வேகவைத்த சாதத்தையும் பயன்படுத்தலாம்)
 2. ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி, தயிர், பால், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 3. தாளிப்புக்குத் தயார் செய்வதற்கு முன் பிரிட்ஜில் வைக்கவும்.
 4. கடாயைச் சூடுபடுத்தி நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
 5. கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய், கடுகு, சீரகம், ஊறவைத்த பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும், துருவப்பட்ட இஞ்சியையும் பெருங்காயத்தையும் சேர்க்கவும்.
 6. இப்போது தயிர் சாதத்தின் மீது நேரடியாக ஊற்றுவதற்கு முன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அல்லது இரண்டு நிமிடத்திற்கு கலக்கவும்.
 7. நன்றாகக் கலக்கி நீங்கள் விரும்பும் தொட்டுகைகளோடு பரிமாறவும்.

எனது டிப்:

நறுக்கப்பட்ட கொத்துமல்லி, பச்சை மிளகாய் அல்லது துருவப்பட்ட கேரட், துருவப்பட்ட வெள்ளரிக்காய், வறுத்த வெங்காயத்தையும்கூட சேர்க்கலாம், பப்படம், ஊறுகாய், இன்னபிறவற்றோடு உண்ணவும்.

Reviews for Thayir Sadam (Curd Rice) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.