எலுமிச்சை சாதம் | Lemon Rice in Tamil

எழுதியவர் Parinaaz Marolia  |  10th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Lemon Rice by Parinaaz Marolia at BetterButter
எலுமிச்சை சாதம்Parinaaz Marolia
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    7

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

425

0

எலுமிச்சை சாதம் recipe

எலுமிச்சை சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon Rice in Tamil )

  • 1 கப் சாதம் (ஒரு நாளானது நல்லது)
  • 1 தேக்கரண்டி பச்சை வேர்கடலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 8-9 கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள் (பொடியாக நறுக்கப்பட்டது)
  • 2 சிறிய பச்சை மிளகாய் (சீரற்று நறுக்கப்பட்டது)
  • 1 எலுமிச்சையின் சாறு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • சுவைக்கேற்ற உப்பு

எலுமிச்சை சாதம் செய்வது எப்படி | How to make Lemon Rice in Tamil

  1. ஒரு பெரிய கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி ஆரம்பித்து, அது சூடானதும், மிளகாய், சீரகம், வேர்கடலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சேர்வைப்பொருள்கள் சற்றே பொன்னிறமாகும்வரை காத்திருக்கவும்.
  2. சாதத்தைச் சேர்த்து கைகளால் சாதத்தை உடைக்காமல் கிண்டவும்.
  3. சுவைக்கேற்றபடி உப்பை சரிசெய்யவும்.
  4. தீயிலிருந்து எடுத்து எலுமிச்சைச் சாறைக் கலந்து நன்றாகக் கலக்கவும்.
  5. புதிதாக நறுக்கப்பட்டக் கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

எனது டிப்:

எலுமிச்சைச் சாதத்தை மீண்டும் சூடுபடுத்தவேண்டாம், அது கசப்புச் சுவையை உங்களுக்குக் கொடுத்துவிடும். முன்னரே தயார் செய்து பின்னர் பரிமாறவேண்டும் என்றால், சாதத்தை முன்பே தயார் செய்து பரிமாறுவதற்கு முன் எலுமிச்சைச் சாறை சேர்த்துக்கொள்ளவும்.

Reviews for Lemon Rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.