Photo of Sweetened cooked rice batter by saranya sathish at BetterButter
432
1
0.0(1)
0

Sweetened cooked rice batter

Jun-15-2018
saranya sathish
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி - 1 கப்
  2. சர்க்கரை - 1/2 கப்
  3. உப்பு - 1/4 டீஸ்பூன்
  4. தேங்காய் துருவல் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் உற்றி சூடு செய்யவும்.
  4. பின்னர் அரைத்த மாவு , உப்பு சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும்.
  5. மாவு சற்று நேரத்தில் கெட்டி ஆக தொடங்கும். அப்போது அதை கரண்டி கொண்டு உடைத்து விடவும்.
  6. இதேபோல் மாவு நன்றாக வெந்து உதிர் உதிராக வரும் வரை உடைத்து விட்டு வேகவிடவும். சுமார் 40 நிமிடம் வரை ஆகும். தேவைஎனில் எண்ணெய் ஊற்றி கொள்ளலாம்.
  7. பின்னர் மாவு புட்டு மாதிரி உதிர் உதிராக வந்ததும் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கலந்து விட்டு பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
senthil vanan
Jun-20-2018
senthil vanan   Jun-20-2018

Super. இதை சேலத்தில் உக்கேளிபடி என்பார்கள். இதில் வாழைப்பழம் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்