வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

Photo of Moong sprout salad by Raihanathus Sahdhiyya at BetterButter
458
2
0.0(0)
0

முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

Jun-23-2018
Raihanathus Sahdhiyya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பாசிப்பயறு சாலட் செய்முறை பற்றி

அதிக சத்துக்கள் அடங்கிய முளைகட்டிய பயறு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த மிகவும் சத்தான சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைகட்டிய பாசிப்பயறு: 2 கப்
  2. துருவிய கேரட்: 1/4 கப்
  3. துருவிய வெள்ளரிக்காய்: 1/6 கப்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம்: 1/6 கப்
  5. பொடியாக நறுக்கிய தக்காளி: 1/6 கப்
  6. துருவிய தேங்காய்: 1/6 கப்
  7. கெட்டித்தயிர்: 4 மேசைக்கரண்டி
  8. மயோனைஸ்: 2 மேசைக்கரண்டி
  9. பொடியாக நறுக்கிய மல்லி புதினா: ஒரு கையளவு
  10. உப்பு: 1 1/2 தேக்கரண்டி
  11. மிளகுத்தூள்: 1 தேக்கரண்டி
  12. எலுமிச்சை சாறு: 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பாசிப்பயறு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய கேரட், துருவிய வெள்ளரிக்காய், துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்க்கவும்
  2. பிறகு அதில் தயிர், மயோனைஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு முறை கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்