செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன் | Chettinad Dry Pepper Chicken in Tamil

எழுதியவர் Sonia Shringarpure  |  21st May 2016  |  
4.5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chettinad Dry Pepper Chicken by Sonia Shringarpure at BetterButter
செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன்Sonia Shringarpure
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

853

2

Video for key ingredients

  செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன் recipe

  செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Dry Pepper Chicken in Tamil )

  • 2-3 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயப்பொடி
  • 1 கருப்பு ஏலக்காய்
  • 1" இலவங்கப்பட்டை
  • 12 கருமிளகு
  • 3 கிராம்புகள்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி பெஞ்சீரகம்
  • 1 தேக்கரண்டி மல்லி
  • 2 பே இலைகள்
  • 5 காய்ந்த மிளகாய்
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1 தேக்கரண்டி எண்ணெய் மேரினேட் செய்வதற்கு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
  • 1 எலுமிச்சைப் பழத்தின் சாறு
  • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி இஞ்சி - பூண்டு விழுது
  • 2 தேக்கரண்டி கெட்டித் தயிர்
  • 2 துண்டு வெங்காயம்
  • சிக்கன் 1 கிலோ

  செட்டிநாடு உலர் மிளகுச் சிக்கன் செய்வது எப்படி | How to make Chettinad Dry Pepper Chicken in Tamil

  1. சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கரம் மசாலா, எண்ணெய், சாம்பார் பொடி ஆகியவற்றோடு 1-2 மணி நேரம் அல்லது இரவு முழுவுதும் சிக்கனை மேரினேட்செய்யவும்.
  2. 2 வெங்காயத்தை நறுக்கி அடர் பழுப்பு நிறத்திற்கு வறுக்கவும். பாதி வெங்காயத்தை தயிருடன் சேர்த்து சாந்தாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதற்கிடையில், காய்ந்த மிளகாய், பேஇலைகள், மல்லி, பெருஞ்சீரகம், சீரகம், கிராம்புகள், கருமிளகு ஆகியவற்றை வறுத்து கரடுமுரடாக (மென்மையாக அல்ல) அரைத்துக்கொள்ளவும்.
  4. கடாயைச் சூடுபடுத்திக்கொள்க. எண்ணெய் சூடானதும், பே இலை, இலவங்கப்பட்டை, கருப்பு ஏலக்காய் சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து மசாலா கடாயைவிட்டு விலகும்வரை வேகவைக்கவும்.
  5. வறுத்த வெங்காயத்தில் பாதியையும் வெங்காயம்- தயிர் சாந்தையும் சேர்த்துக்கொள்ளவும். உப்பு சரிசெய்துகொண்டு, சிக்கன் வேகும்வரை வேகவைக்கவும். இறுதியாக கஸ்தூரி வெந்தயப் பொடி, நசுக்கப்பட்ட கருமிளகைச் சேர்க்கவும்.

  Reviews for Chettinad Dry Pepper Chicken in tamil (2)

  khaja muhaideen6 months ago

  அருமையான டிஷ்
  Reply

  janani illayarasan2 years ago

  Arumai
  Reply

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.