வீடு / சமையல் குறிப்பு / சியோ ஆசிகோ முட்டை அத்தோ

Photo of Siyo aasiko egg attho by pavumidha arif at BetterButter
0
4
0(0)
0

சியோ ஆசிகோ முட்டை அத்தோ

Jun-26-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சியோ ஆசிகோ முட்டை அத்தோ செய்முறை பற்றி

சுவை மற்றும் அனைத்து காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • కఠినము
 • పండుగలాగా
 • జాపనీస్
 • మిళితం
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. முட்டை 3
 2. நூடுல்ஸ் 2 கப்
 3. முட்டை கோஸ் 1
 4. கேரட் 3
 5. பீட்ரூட் சாறு 3 கப்
 6. பூண்டு 6
 7. வெங்காயம் 2
 8. நல்லெண்ணெய் 4 டீஸ்பூன்
 9. வேக வைத்த உருளைக்கிழங்கு 1
 10. பொட்டு கடலை 3 டீஸ்பூன்
 11. காய்ந்த மிளகாய் 4
 12. சிக்கன் மசாலா 2 டீஸ்பூன்
 13. மிளகு சீரகம் 2 டீஸ்பூன்
 14. முந்திரி பருப்பு 4
 15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. கடாயில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்த பின் சிவப்பு ரேஸ்பெர்ரி தூள் சேர்த்து கிளறவும்.பின்னர் நூடுல்ஸை போட்டு லேசாக. கிளறவும்.
 2. பின்னர் மற்றொரு கடாயில் பீட்ரூட் சாறு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும் (சிறு தீயில்)
 3. அரைகுறையாக வெந்த நூடுல்ஸை் பீட்ரூட் சாறில் போட்டு 10-15 நிமிடம் நன்கு வேக வைத்து.பின் வடிகட்டி நூடுல்ஸ் தனியே எடுத்து கொள்ளவும்
 4. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டை,மிளகு சீரகம் மற்றும் உப்பு கலந்து அதனை வாணலியில் ஊற்றி. நன்கு கிளறி தனியாக வைக்கவும்
 5. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
 6. முட்டை கோஸை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும். கேரட் ,உருளைக்கிழங்கை துருவி வைக்கவும்.வெங்காயம் 1/4 கப் நீள வாக்கில் வெட்டி பச்சையாக தனியே எடுத்து வைக்கவும்
 7. வாணலியில் அதே நல்லெண்ணெய் ஊற்றி முட்டைகோஸ் மற்றும் கேரட்,உப்பு நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்
 8. பின்னர் மிக்ஸியில் பொட்டு கடலை,சிக்கன் பொடி, காய்ந்த மிளகாய் முந்திரி பருப்பு ,உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். மசாலா பொடி தயார்
 9. கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி தேவையான அளவு மசாலா பொடி எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.
 10. இப்போது பெரிய பாத்திரத்தில் முதலில் நூடுல்ஸை போட வேண்டும்.பின் முட்டை ,பொரித்த வெங்காயம்,பச்சை வெங்காயம்,உருளைக்கிழங்கு,கேரட் மற்றும் முட்டைகோஸ் மற்றும் வறுத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
 11. ஆரோக்கியமான சியோ ஆசிகோ அத்தோ தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்