வீடு / சமையல் குறிப்பு / அரைக்கீரைப் பொரியல்

Photo of Araikeerai poriyal by Asiya Omar at BetterButter
612
2
0.0(0)
0

அரைக்கீரைப் பொரியல்

Jul-02-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைக்கீரைப் பொரியல் செய்முறை பற்றி

அரைக்கீரை தனித்துவமிக்க சுவையைக் கொண்டது. பொரியல்,கடைசல் கூட்டு என்று செய்து அசத்தலாம்.இந்தப் பொரியல் ஆரோக்கியமானது,சத்து மிக்கது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை பெரியகெட்டு -1
  2. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  3. சீரகம் -1 தேக்கரண்டி
  4. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
  5. கிள்ளிய மிளகாய் வற்றல் - 3
  6. பெரிய வெங்காயம் 2 அல்லது சின்ன வெங்காயம்
  7. பூண்டு பற்கள் -6
  8. உப்பு - தேவைக்கு.
  9. தேங்காய்த்துருவல் -4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கீரையை ஆய்ந்து,மண் போக நன்கு அலசி,நறுக்கி எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுசூடானவுடன்,சீரகம்,உளுத்தம் பருப்பு,கிள்ளிய மிளகாய்வற்றல் போடவும்.நறுக்கிய வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கவும்,தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்,சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.அதிகம் சேர்த்தால் கடுத்து விடும்.
  4. நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டவும்.
  5. சுவையான அரைக்கீரைப் பொரியல் தயார். சூடான சோறு பக்க உணவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்