வீடு / சமையல் குறிப்பு / குழம்புமா உப்புமா

Photo of Kuzhambuma uppuma by Krishnasamy Vidya Valli at BetterButter
199
2
0.0(0)
0

குழம்புமா உப்புமா

Jul-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குழம்புமா உப்புமா செய்முறை பற்றி

மிகவும் பழமையான மாலை நேர சிற்றுண்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு -1 கப்
  2. உப்பு -3/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  4. சாம்பார்பொடி 1/2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  6. புளி 1 நெல்லிக்காய் அளவு
  7. தாளிக்க
  8. நல்லெண்ணெய் -3 மேஜைக்கரண்டி
  9. கடுகு உளுத்தம் பருப்பு தலா 3/4 தேக்கரண்டி
  10. வறுத்த வேர்கடலை -2 மேஜைக்கரண்டி
  11. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் -2 சிட்டிகை
  13. மிளகாய் வத்தல் 2 அல்லது 3
  14. கருவேப்பிலை -2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவு, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம், சாம்பார் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. புளியை கெட்டியாக கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும்
  4. இரண்டையும் ஒன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அப்படியே வைக்கவும்.
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  6. செய்துவைத்த மாவை சேர்த்து கிளறவும்
  7. தோசை திருப்பி உதவியுடன் நன்றாக கொத்திக்கொடுக்கவும்
  8. உசிலி போன்று நல்ல உதிர்உதிராக வரும் வரை கிளறவும்
  9. சுவையான குழம்புமா உப்புமா தயார். விருப்பப்பட்டால் இரண்டு சிட்டிகை வெல்லப்பொடி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்