வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு பொடிமாஸ்

Photo of Besan podimass by vani vani at BetterButter
333
1
0.0(0)
0

கடலை மாவு பொடிமாஸ்

Jul-15-2018
vani vani
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு பொடிமாஸ் செய்முறை பற்றி

இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற அற்புதமான ஒரு சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ராஜஸ்தான்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு அரை கப்
  2. மைதா ஒரு டேபிள் ஸ்பூன்
  3. பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன்
  4. எண்ணெய் 2 டீஸ்பூன்
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
  7. நறுக்கிய தக்காளி 1 சிறியது
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  9. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  10. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. தண்ணீர் தேவைக்கேற்ப
  13. மல்லி இலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மைதா மாவு பேக்கிங் பவுடர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  2. அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும்
  4. அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்
  5. பின்பு நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. வெங்காயம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. வதக்கிய கலவையில் நம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும்
  8. மாவை ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே விடவும்
  9. ஒரு நிமிடம் கழித்து அதை நன்றாக கிளறி விடவும்
  10. சிறு சிறு கட்டிகளாக கரண்டியை வைத்து நன்றாக கிளறி விடவும்
  11. நன்கு வதங்கிய உடன் மேலே மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்