வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ ப்லோஸ்ஸோம் கட்லெட் :

Photo of Valaipoo blossom cutlet by sowmya shriram at BetterButter
458
1
0.0(0)
0

வாழைப்பூ ப்லோஸ்ஸோம் கட்லெட் :

Sep-05-2018
sowmya shriram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ ப்லோஸ்ஸோம் கட்லெட் : செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பூ - 1
  2. சோயா – ¼ கப்
  3. பிரட் தூள் - தேவையான அளவு
  4. இஞ்சி – ½ இன்ச்
  5. முட்டை - 1
  6. பூண்டு – 1 டேபிள்ஸ்பூன்
  7. வெங்காயம் - 1
  8. மிளகு தூள் – ½ டீஸ்பூன்
  9. மிளகாய் - 1
  10. கரமசாலா - 1 டீஸ்பூன்
  11. உருளைக்கிழங்கு – 2
  12. மல்லியிலை – ¼ கப்
  13. எண்ணெய் - தேவையான அளவு
  14. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூயை கட் செய்து தண்ணிரில் கழுவிக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் வாழைப்பூ, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  3. சோயாவை கொதிக்கும் தண்ணீரில் ஊரவைத்து சிறிது சிறிதாக கட் செய்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு, வெங்காயம், மிளகாய், வெட்டிய சோயா, இஞ்சி, உப்பு, மிளகு தூள், கரமசாலா, வாழைப்பூயை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  5. ஸ்மாஷ் செய்து உருளைக்கிழகையை , மல்லியிலை , சிறிது பிரட் தூள் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
  6. லெமன் சைஸ் அளவு வாழைப்பூ மிக்ஸ் எடுத்து ரவுண்டாக பிடித்து முட்டையில் டிப் செய்து பிரட் தூளில் போட்டு பிரட்டவும்.
  7. அந்த ரவுண்டை எண்ணெயில் போட்டு எடுத்தால் ஆரோக்கியமான வாழைப்பூ ப்லோஸ்ஸோம் கட்லெட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்