வீடு / சமையல் குறிப்பு / சேமியா கிச்சடி

Photo of Semiya Kichadi by Rachell Revathi Samuel at BetterButter
812
1
0.0(0)
0

சேமியா கிச்சடி

Sep-25-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேமியா கிச்சடி செய்முறை பற்றி

காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சேமியா கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிச்சடி: சேமியா 2.5 கப்
  2. எண்ணெய் 3 ஸ்பூன்
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. உளுந்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
  5. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிது
  7. பச்சை மிளகாய் 2
  8. மிளகாய் வற்றல் 1
  9. இஞ்சி சிறிய துண்டு
  10. முந்திரி பருப்பு 5-10
  11. வெங்காயம் 1
  12. தக்காளி 1
  13. கேரட் 1
  14. பீன்ஸ் 7-10
  15. பச்சை பட்டாணி 1/4 கப்
  16. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. தேங்காய் சட்னி: தேங்காய் 2 துண்டுகள்
  19. பொரிகடலை 3 ஸ்பூன்
  20. மிளகாய் வற்றல் 3
  21. பூண்டு 1
  22. உப்பு தேவையான அளவு
  23. எண்ணெய் 1 ஸ்பூன்
  24. கடுகு 1/2 ஸ்பூன்
  25. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் சேமியா சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  2. பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.வேறு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  4. கருவேப்பிலை பச்சை மிளகாய் மிளகாய் வற்றல் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  5. முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
  6. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் வதங்கியதும் தக்காளி கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  8. மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்..
  9. சிறிது தண்ணீர் சேர்த்து காய்கள் வேகவிடவும்.
  10. சேமியாவிற்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.
  11. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
  12. தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்க்கவும்.
  13. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  14. தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளறவும்.சவையான கிச்சடி தயார்
  15. கிச்சடி சட்னியுடன் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்