வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் உளுந்து கஞ்சி(இனிப்பு)

Photo of Coconut milk Ulundhu Sweet porridge by Nazeema Banu at BetterButter
855
2
0.0(0)
0

தேங்காய்ப்பால் உளுந்து கஞ்சி(இனிப்பு)

Sep-27-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் உளுந்து கஞ்சி(இனிப்பு) செய்முறை பற்றி

கீழக்கரை (இராமநாதபுரம்)மிகவும் சத்தான சுவை மிகுந்த கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து அரை கப்
  2. கருப்பட்டி துருவியது முக்கால் கப்
  3. தேங்காய் பெரிய அரை மூடி
  4. முட்டை 1

வழிமுறைகள்

  1. உளுந்தை ஒரு மணி நேரம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
  2. தேங்காயை அரைத்து முதல் பால் ஒரு கப, இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்.
  3. உளுந்தை மிக்சியில் இட்டு அரைக்கவும்.
  4. இரண்டாம் பாலுடன் அரைத்த உளுந்தை கரைத்து அடுப்பில் வைக்கவும்.
  5. சிறு தீயில் வேக வைக்கவும்.
  6. நன்றாக வெந்து வரும் போது கருப்பட்டி தூள் சேர்த்து கிளறவும்.
  7. அதில் ஒரு முட்டையை ஊற்றி கலக்கி கிளறி விடவும்.
  8. கடைசியாக முதல் தே.பால் ஊற்றி கலந்து ரொம்ப கொதி வரும் முன்பே அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான உடலுக்கு வலிமை தரக்கூடிய ஆரோக்கிய கஞ்சி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்